RECENT NEWS

சென்னைக்கு 1.4 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பேர்.. 2 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

முகப்பு

”இதெல்லாம் தேவையாமா?”.. ஓடும் ரயில் படிக்கட்டில் முகம் சுழிக்க வைத்த பெண்..

Jun 02, 2025 12:17 PM

139

”இதெல்லாம் தேவையாமா?”..  ஓடும் ரயில் படிக்கட்டில் முகம் சுழிக்க வைத்த பெண்..

ரீல்ஸ் மோகத்தால், ஓடும் ரயில் படிக்கட்டில் நின்று, நடனமாடி வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளம் பெண்ணிற்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

சமூக வலைதளங்களில் சிலர், தங்களை அதிகமானோர் பின் தொடர வேண்டும் என்ற ஆசையில், புதுபுது விதமாக புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து அதனை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுகின்றனர்.

இன்னும் சிலரோ பலபடிகள் மேலே போய், கடலில் ரீல்ஸ் எடுப்பது, மலை மீது ஏறி ரீல்ஸ் எடுப்பது என, லைக்குகளை அள்ளுவதற்காக, ஆபத்தை உணராமல் செயல்படுகின்றனர். இதில் சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே உலைவைத்துவிடுகிறது. இதுகுறித்து பலமுறை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் ரீல்ஸ் மேக்கர்ஸ் திருந்துவதாய் இல்லை.. தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சேர்ந்த ஷகிலா பானு என்ற இளம்பெண், நாகர்கோவில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் படிக்கட்டில் நின்றுக்கொண்டு, சினிமா பாடலுக்கு நடனமாடும் விதமாக கைகளை அசைத்து தலையை ரயிலின் வெளியே தூக்கி முகபாவனை செய்து அதனை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணை சமூகவலைதளங்களில் பின் தொடர்வோர் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உடனடியாக ரயில்வே நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இளைய தலைமுறை இது போன்ற ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தை உணராமல் பதிவிடுவதாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அந்த வீடியோவை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

உற்சாகம் என்ற பெயரில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அந்த நடிகை குளித்த நீரில் தயாரான வாசனை சோப்பு ரூ 25 ஆயிரத்துக்கு ரீ சேல்..!அடேய்.. ஆசைக்கு அளவே இல்லையா..?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies