தமிழ்நாடு
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
Jun 02, 2025 06:58 AM
39
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் புத்தாடை அணிந்து உற்சாகமுடன் பள்ளிக்கு வருகை தந்த புதிய மாணவ மாணவிகளை மிக்கி மவுஸ் பொம்மைகளைக்கொண்டும் பலூன்களை கைகளில் வைத்துக்கொண்டும் பழைய மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.
தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவிகளின் நெற்றியில் ஆசிரியைகள் சந்தனம், குங்குமம் வைத்து வரவேற்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவ மாணவிகளை வரவேற்கும் விதமாக மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்குள் அழைத்து சென்றனர்
திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மேயர் இளமதி மாலை அணிவித்து, சாக்லேட் கொடுத்து வரவேற்பு அளித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu