சற்றுமுன்
15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நிறைவு.. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆறு சதவீதம் ஊதிய உயர்வு
May 30, 2025 02:09 AM
91
15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நிறைவு.. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆறு சதவீதம் ஊதிய உயர்வு
சென்னையில் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் தமிழக அரசு ஏழு மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆறு சதவீதம் ஊதிய உயர்வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
குரோம்பேட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் தொமுச, சிஐடியு உள்ளிட்ட 86 சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2023 செப்டம்பருக்கு பதில் 2024 செப்டம்பர் முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்க மறுத்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட சங்கங்கள் கையழுத்திடாமல் வெளிநடப்பு செய்தன.
இதனால் தொழிலாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu