முகப்பு
செல்லாது... செல்லாது.... ட்ரம்ப் விதித்த வரி... தடை விதித்த கோர்ட் உலக நாடுகள் குஷி!
May 29, 2025 03:40 PM
112
ட்ரம்ப் விதித்த வரி தடை விதித்த கோர்ட் தங்கம் விலை குறைகிறதா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு, சர்வதேச வர்த்தக நீதிமன்றம் ‘செல்லாது... செல்லாது....’ என அதிரடி தடை விதித்திருப்பதுதான், ட்ரம்புக்கு பின்னடவை ஏற்படுத்தி, உலகநாடுகளையே ஹப்பாடா என பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.
"ட்ரம்ப் தனக்கு உள்ள அதிகாரத்தை மீறி, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையை மாற்றுகிறேன் எனகிற பெயரில் பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். அவசர நிலையின் கீழ், ட்ரம்ப் பிற நாடுகளின் மீது வரிகளை விதிக்க முடியாது. அதனால், இந்த வரி விதிப்பு நிறுத்தப்படுகிறது" என்ற சர்வதேச வர்த்தக நீதிமன்ற நீதிபதிகள், அதற்கான சட்டரீதியிலான காரணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1977 ஆம் ஆண்டின் International Emergency Economic Power Act எனப்படும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் இந்த வரிகளை விதிக்க உதவியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இத்தகைய விரிவான அளவில் வரி விதிப்பதற்கான அதிகாரத்தை, அந்தச் சட்டம் அவருக்கு வழங்கவில்லை.
அமெரிக்க நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதுதான் அவசர நிலையை பிரகடனப்படுத்தி வரி விதிக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அவசரநிலையின் கீழ், வரி விதிப்பை மேற்கொண்டுள்ளார். ஆனால், அமெரிக்கா கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையில் தான் இயங்கி வருகிறது என்பதை, தெளிவாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய, 3 நீதிபதிகள் கொண்ட குழு தெரிவித்துள்ளது.
மேலும், உலகளாவிய மற்றும் பழிவாங்கும் வகையில் வரி உத்தரவுகள், இறக்குமதிகளை வரிகளின் மூலம் கட்டுப்படுத்த, சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் மூலம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள, அதிகார எல்லையை மீறியிருக்கிறார் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பெரிய அடியைக் கொடுத்ததோடு, உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் அவரது விரிவான திட்டத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளது, நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் மேல்முறையீடு செய்திருந்தாலும், இந்தத் தீர்ப்பு, டிரம்ப் அச்சுறுத்திய அதிகபட்ச வரி விதிப்பதிலிருந்து பின்வாங்கக்கூடும் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.
மேலும், இனி வரும் நாட்களில் பெரும் வர்த்தகப் பதட்டம் இருக்காது என்கிற நம்பிக்கை, முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதால், தங்கத்தின் விலை சரிந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி விதித்த, வரி விகிதங்கள் கட்டணங்கள் நடைமுறைக்கு வருவதை, அமெரிக்க நீதிமன்றம் தடுத்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஆசிய பங்குகள் மற்றும் வால் ஸ்ட்ரீட் நிதி சந்தையின் எதிர்காலங்கள் உயர்ந்தன. இதனால், மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பும் உயர்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu