முகப்பு
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் 9வது முறை சோதனையும் தோல்வி..!
May 28, 2025 12:12 PM
133
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் 9வது முறை சோதனையும் தோல்வி
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட், 9வது முறையாக சோதனை முறையில் ஏவப்பட்ட நிலையில், பூமியில் பத்திரமாக திரும்ப வேண்டிய பூஸ்டர் ராக்கெட், எரிபொருள் கசிவு காரணமாக, விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை இழந்து, இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட 403 அடி உயர ராக்கெட்டின் முதல் பகுதி பிரிந்து திட்டமிட்ட இலக்கை எட்டினாலும், அதன் கதவுகள் திறக்காததால் மாதிரி செயற்கைக் கோள்களை ஏவ முடியாத நிலை ஏற்பட்டது.
ராக்கெட்டின் மற்றொரு பகுதி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட வேகமாகப் பிரிந்ததால், விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றிச் சுழன்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்த நிலையில், இந்த பின்னடைவுகளில் கிடைக்கும் டேட்டாக்கள், அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என, ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu