உலகம்
ரத்த புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட 3 வயது குழந்தை.. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டம்..!
May 26, 2025 12:28 PM
949
புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தை
துருக்கியில், லியூகேமியா என்றழைக்கப்படும் ஒருவகை ரத்த புற்றுநோயிலிருந்து மூன்று வயது குழந்தை மீண்டதை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கானோர் வானில் பலூன்களை பறக்கவிட்டனர்.
அலி ஆசஃப் 8 மாத குழந்தையாக இருந்தபோது லியூகேமியா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகளை 2 ஆண்டுகளாக மேற்கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
மகன் முழுமையாக குணமடைந்ததை கொண்டாட வருமாறு தந்தை சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பலூன் விடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu