RECENT NEWS

காதலுக்கு மரியாதை மாறியது கிளைமேக்ஸ் ஆசிரியை கொடூர கொலை..! தந்தையின் பயங்கர செயல்

முகப்பு

விஜய்யின் த.வெ.க அலுவலக நுழைவு வாயில் அருகே திடீர் தண்ணீர் பந்தல்

May 24, 2025 03:05 PM

232

விஜய்யின் த.வெ.க அலுவலக நுழைவு வாயில் அருகே திடீர் தண்ணீர் பந்தல்

"உன்னைத்தேடி வருவோருக்கு தண்ணீர் கொடு" என்ற வாசகத்துடன் தண்ணீர் பந்தல்

சென்னை பனையூரில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழக அலுவலக நுழைவுவாயில் அருகே, மர்ம நபர்கள் வைத்த தண்ணீர் பந்தலை, த.வெ.க.வினர் அகற்றியுள்ளனர்.

தமிழக வெற்றிக்கழக அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு விஜய் தண்ணீர் கூட கொடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆகியோரது படத்துடன், உன்னைத் தேடி வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடு என்ற வாசகத்துடன், அந்த திடீர் தண்ணீர் பந்தல் இரவோடு, இரவாக அமைக்கப்பட்டது.

இன்று காலை இதுகுறித்து அறிந்த த.வெ.க.வினர், மர்ம நபர்கள் வைத்த தண்ணீர் பந்தலை அகற்றியதோடு, அவர்கள் யார் என விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. வேறு நபர்கள் வைத்த தண்ணீர் பந்தலை வேகவேகமாக அகற்றிய த.வெ.க.வினர், தங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க முன்வரவில்லை.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாலையில் சறுக்கிய பைக் காதலன் மடியில் பிரிந்த காதலி உயிர் ..! சாலைக்குழி.. மணலால்..விபரீதம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies