மாவட்டம்
டெம்போ வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
May 22, 2025 02:36 PM
214
நேருக்கு நேர் மோதி விபத்து
தஞ்சாவூர் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த டெம்போ வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து டெம்போ வேனில் 12 பேர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வழிபாடு செய்ய வந்தனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் பாலப்பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு புறமாகவே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு அவ்வழியே அதிவேகமாக வந்து கொண்டிருந்த வேன், எதிரே தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது நேருக்குநேர் மோதியுள்ளது.
குறுகலான அந்த சாலையில் எதிர்திசையில் வந்த பேருந்து, ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் பயணிகளை இறக்கிவிடுதற்கான நிறுத்தப்பட்ட நிலையில், இதனை எதிர்பாராத வேன் அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில், வேனில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மற்றொருவர் சிகிச்சை பலனின்றியும் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 13 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu