முகப்பு
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்.. மீட்புப் பணிகள் தீவிரம்..
May 19, 2025 01:51 PM
294
பெங்களூருவில் கடந்த 48 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையில் மாநகரின் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
HR layout, Electronic City, Silk Board உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகள், கடைகளுக்குள் புகுந்துள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வரை நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் டிராக்டர்கள் மூலமும் ரப்பர் படகுகள் மூலமும் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மகாதேவபுரா பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு தூய்மைப் பணி செய்து வந்த சசிகலா என்ற பெண் உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu