மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சேலத்தில் ஆணழகன் போட்டி
May 18, 2025 11:52 AM
54
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சேலத்தில் ஆணழகன் போட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தளபதி கிளாசிக் 2025 என்ற தலைப்பில் தெற்கு மண்டல அளவிலான ஆணழகன் போட்டி, சேலம் நேரு கலையரங்கில் நடைபெறுகிறது.
இப்போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். போட்டியை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, மேயர் ராமச்சந்திரன், திமுக முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கம், தொழிலதிபர் கார்த்திகேயன், லைக்கா புரொடக்க்ஷன் சிஇஓ தமிழ் குமரன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கு வந்தவர்களை போட்டி ஒருங்கிணைப்பாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் வரவேற்றார். முதலில் நடைபெற்ற ஆண்கள் பிரிவு ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு விருந்தினர்கள் பரிசளித்தனர். மாலையில் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொள்கிறார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu