RECENT NEWS

ராமதாஸ் பிறந்தநாளில் நடைபயணம் தொடங்கும் அன்புமணி? ஜூலை 25 முதல் நடைபயணம் தொடங்க திட்டம்..

BIG STORIES

மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களை நடிகர் சூரி கடுமையாக விமர்சித்தது ஏன்?

May 17, 2025 01:37 AM

424

மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களை நடிகர் சூரி கடுமையாக விமர்சித்தது ஏன்?

சூரி கடுமையாக விமர்சித்தது ஏன்?

மாமன் படம் வெற்றி அடைய வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களை முட்டாள்கள் என்றும் ரசிகர்களாக இருக்கவே தகுதி இல்லாதவர்கள் என்றும் நடிகர் சூரி கடுமையாக விமர்சித்தார்.

விடுதலை, கருடன் , கொட்டுக்காளி என அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வரும் நடிகர் சூரியின், நடிப்பில் வெளியான மாமன் என்ற திரைப்படம் வெற்றி பெறவும், சூரியின் ஹாட்ரிக் வெற்றிக்காகவும் மதுரையை சேர்ந்த சூரி ரசிகர்கள், அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்க்டன் செலுத்தினர்.

மாமன் படம் வெள்ளிக்கிழமை வெளியாகி உள்ள நிலையில் சென்னை , வட பழனியில் உள்ள கமலா திரையரங்கில் சென்று படம் பார்த்த சூரி ரசிகர்கள் திரையரங்கில் கண்ணீர் விட்டு அழுது படத்தை ரசிப்பதாக தெரிவித்தார்.

அப்போது அவரிடம் மதுரையில் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பபட்டது. மாமன் படத்தின் வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியவர்களை முட்டாள்கள் என்றும் தனக்கு ரசிக்ரகளாக இருக்கவே தகுதி இல்லாதவர்கள் என்றும் ஆவேசமாக கூறினார்.

மாமன் படம் நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள், படம் வெற்றி பெறும் என்ற சூரி, இல்லையென்றால் வெற்றி பெறாது என்று கூறியதோடு மண் சோறு சாப்பிட்டால் படம் வெற்றி பெற்றுவிடுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்ட சூரியின் கருத்தை சிலர் ஆதரித்து வரும் நிலையில் மண் சோறு சாப்பிட்டது குத்தமா? ரசிகர்களாக இருக்க என்ன தகுதி ? வேண்டும் அதே திரையரங்கில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பார்த்து விட்டு தனது குழுவினருடன் உற்சாகமாக வெளியே வந்த சந்தானம் மகிழ்ச்சியாக காணப்பட்டார். ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும் கிளைமேக்ஸ் போல ரசித்துப்பார்ப்பதாக கூறி வெற்றியின் அடையாளமாக கேக் வெட்டினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பீர் பாட்டிலை வாயில் திணித்து +2 மாணவி கொலை..! இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies