RECENT NEWS

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

BIG STORIES

நகைக்கடையில் சோதனை.. "ஒன்றும் செய்ய முடியாது" என செய்தியாளர் மீது தாக்குதல்..!

May 16, 2025 01:18 AM

1738

நகைக்கடையில் சோதனை.. "ஒன்றும் செய்ய முடியாது" என செய்தியாளர் மீது தாக்குதல்..!

நகைக்கடையில் சோதனை.. "ஒன்றும் செய்ய முடியாது" என செய்தியாளர் மீது தாக்குதல்..!

திருவாரூர் காந்தி சாலையில் உள்ள துர்க்கா ஜுவல்லரி நகைக்கடையில் , திருட்டு நகை வாங்கியதாக போலீசார் நடத்திய சோதனையை படம் பிடித்த செய்தியாளரை தாக்கி இழுத்துச் சென்ற நகைக்கடை ஊழியர்கள் செல்போனை பறித்துச் சென்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் 1300 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடியதாக 3 பேர் கும்பலை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவர்கள் தாங்கள் திருடிய நகைகளை திருவாரூரில் உள்ள தினகரன் மற்றும் ஆறுமுகத்திடம் கொடுத்து விற்றதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் ஆறுமுகம் மற்றும் தினகரனை பிடித்து விசாரித்தனர் .

இந்த இருவரும் தாங்கள் திருட்டு நகைகளை, திருவாரூர் விஜயபுரம் காந்தி சாலையில் உள்ள துர்கா ஜுவல்லரி, உள்ளிட்ட மூன்று நகைக் கடைகளில் விற்றதாக போலீசில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களையும் கைது செய்த பெங்களூர் காவல் துறையினர் புதன்கிழமை மாலை திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு வந்து , உள்ளூர் போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட 3 நகைக்கடைகளிலும் விசாரணை மேற்கொண்டனர்.

திருவாரூர் விஜயபுரம் காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ துர்கா ஜூவல்லரி என்கிற நகைக்கடையில் போலீசார் விசாரணை செய்தபோது , அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை மறித்த கடை ஊழியர்கள் செல்போனை பறித்து வாக்குவாதம் செய்தனர்

"யார் வந்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது... யாரை வேண்டுமானாலும் பார்ப்போம்..." என்று இறுமாப்போடு பேசிய அந்த நகைக்கடை ஊழியர்கள், செய்தியாளரின் அடையாள அட்டையை பிடுங்கி அவரை சட்டையை பிடித்து இழுத்துச் சென்று தாக்கினர்

ஒரு கட்டத்தில் செய்தியாளரின் செல்போனை பறித்துக் கொண்டு அவரை விரட்டினர். தகவல் அறிந்து விரைந்து வந்த மற்ற செய்தியாளர்கள், கடை ஊழியர்களிடம், செல்போனை எப்படி பறிக்கலாம் ? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்

இது குறித்து செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நகைக்கடை ஊழியர்களான ஜெஃப்ரின் இமானுவேல், முத்துக்குமார், வேல்முருகன் ஆகிய மூன்று பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே திருட்டு நகை தொடர்பாக 3 கடைகளிலும் பெங்களூரு காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies