பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
BIG STORIES
“DD நெக்ஸ்ட் லெவல் ரூ.100 கோடி கோவிந்தா” சந்தானத்துக்கு சோதனை..! திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ்
May 15, 2025 02:12 AM
741
“DD நெக்ஸ்ட் லெவல் ரூ.100 கோடி கோவிந்தா” சந்தானத்துக்கு சோதனை..! திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ்
நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பாடலை நீக்க கோரியும், 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் சந்தானம் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் 16 ந்தேதி வெளியாக உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் திருப்பதியில் புகழ் பெற்ற கோவிந்தா பாடலை பயன்படுத்தி வெளியான பர்ஸ்ட் சிங்கிள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த பாடலை நீக்காவிட்டால் திருப்பதிக்குள் தமிழக எம்.பி எம்.எல் ஏக்கள் சாமி கும்பிட வர முடியாது என்று எச்சரித்துள்ள ஜனசேனா காட்சி நிர்வாகி ஒருவர், திருமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற தமிழ் நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் லேப்டாப்பில் வீடியோவை காண்பித்து முறையிட்டார். தமிழகத்தில் சேலத்திலும் இந்த பாடலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி அவரது வழக்கறிஞர் அஜய்குமார் மூலம் நடிகர் சந்தானம், தயாரிப்பு நிறுவனமான நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதில் உடனடியாக அந்த படம் வெளியாவதை நிறுத்த வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அந்தப் பாடலை நீக்கி விட்டு ஏழுமலையான் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பெருமாளின் பக்தி பாடலை ரீமிக்ஸ் செய்து பக்தர்கள் மனம் புண்படும் வகையில் செயல்பட்டதற்காக 100 கோடி ரூபாய் மானநஷ்ட இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் பானுபிரகாஷ் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த சந்தானம், தான் பெருமாளின் பக்தர் என்றும், தனது படத்தின் பாடலில் முதல் வார்த்தையாக அவரது திரு நாமம் உச்சரிக்கப்பட்டால் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அப்படி வைத்ததாக தெரிவித்தார். படம் வெளியாகும் முன்பாக திருப்பதிக்கு சென்று இயக்குனருடன் நடந்தே சென்று திருமலையில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் கூறினார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu