BIG STORIES
"ப்ரோ வீடியோ டெலிட் பண்ணுங்க" கையெடுத்து கும்பிட்ட பைக் திருடன் இதற்குத்தான் தேவை சிசிடிவி
May 14, 2025 02:36 AM
471
"ப்ரோ வீடியோ டெலிட் பண்ணுங்க" கையெடுத்து கும்பிட்ட பைக் திருடன் இதற்குத்தான் தேவை சிசிடிவி
விலையுயர்ந்த பைக்கைத் திருடிய திருடன் ஒருவன், இன்ஸ்டாகிராமில் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் சுற்றுவதைக் கண்டு பயந்து, எடுத்த இடத்திலேயே பைக்கைக் கொண்டு வந்து விட்டு, சிசிடிவியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டுச் சென்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்துள்ளது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த அருண்ராஜ் ஸ்ரீபெரும்புதூர் பூண்டூரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 11 ம் தேதி வீட்டின் முன்பாக அருண்ராஜ் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மாஸ்க் அணிந்து வந்த இளைஞன் ஹேண்ட் பாரை காலால் உதைத்து, பக்கவாட்டு லாக்கை உடைத்து பைக்கை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சி பதிவுடன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த அருண்ராஜ், அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு, பைக்கைக் கண்டுபிடித்துத் தருமாறு தனது நண்பர்களை டேக் செய்திருந்தார். அதுதான் பைக் திருடனுக்குத் தலைவலியாகிப் போனது.
வீடியோ வெளியானதால் எங்கே சிக்கிக் கொள்வோமோ என பயந்து போன திருடன், மறுநாளே அந்த பைக்கைக் கொண்டு வந்து அருண்ராஜ் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, சிசிடிவியின் முன்பாக கையெடுத்து கும்பிட்டுச் சென்றான்.
அத்துடன் விட்டு விடாமல் பைக் திருட்டு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட அருண்ராஜின் ஐடியை டேக் செய்த திருடன், "ப்ரோ வீடியோவை டெலிட் பண்ணுங்க, இல்லனா பாத்துக்கோங்க நாங்க என்ன பண்ணணுமோ அதை பண்ணுவோம்" என மிரட்டும் தோணியில் பதிவிட்டுள்ளான்.
பைக் கிடைத்துவிட்டாலும் அந்தத் திருடனைக் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருண்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu