RECENT NEWS

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

BIG STORIES

“அம்மா போலீஸ் கூப்பிடுறாங்க..” கொலைவழக்கில் சிக்கிய 6 ஆம் வகுப்பு மாணவன் அடம்..! ஆக்சன் சினிமா - வீடியோ கேம் விபரீதம்..!

May 14, 2025 02:21 AM

648

“அம்மா போலீஸ் கூப்பிடுறாங்க..” கொலைவழக்கில் சிக்கிய 6 ஆம் வகுப்பு மாணவன் அடம்..! ஆக்சன் சினிமா - வீடியோ கேம் விபரீதம்..!

“அம்மா போலீஸ் கூப்பிடுறாங்க..” கொலைவழக்கில் சிக்கிய 6 ஆம் வகுப்பு மாணவன் அடம்..! ஆக்சன் சினிமா - வீடியோ கேம் விபரீதம்..!

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட சண்டையில், 9 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்ததாக 6 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் அழைத்துச் சென்றனர். ஆக்சன் சினிமா, செல்போன் விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

“அம்மா போலீஸ் கூப்பிட்டு போறாங்க... நான் போக மாட்டேன்..” என்று குழந்தை குணம் மாறாமல் அடம் பிடிக்கும் இவன் தான் போலீசாரால் கொலை வழக்கில் கைதான சிறுவன்..!

கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி காமரிபேட்டையில் 14 வயது சிறுவன் ஒருவன் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 9 ஆம் வகுப்பு படிக்க பள்ளிக்கு செல்ல தயாராகி வந்தான். சம்பவத்தன்று மாலையில் வீட்டில் தேனீர் அருந்தி விட்டு தனது தாயிடம் புதிய ஆடைகளை எடுத்து வைக்க சொல்லி விட்டு தெருவில் விளையாட சென்றான். எதிர்வீட்டில் வசிக்கின்ற 6 ஆம் வகுப்பு மாணவனுடன் இணைந்து விளையாடியபோது இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகின்றது. உடனடியாக வீட்டுக்குள் சென்ற 6 ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் இருந்து பேப்பர் வெட்டும் கட்டர் கத்தியை எடுத்து வந்து 14 வயது சிறுவனின் வயிற்றில் குத்திவிட்டு வீட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. வயிறு கிழிந்து ரத்தம் சொட்ட உயிருக்கு போராடிய சிறுவனை அவனது பெற்றோர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த சிறுவனிடம் விசாரித்தனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட சாதாரண சண்டையில் தான் வீடியோ கேமில் வருவதை போல கத்தியை எடுத்து அட்டாக் செய்ததாக தெரிவித்தான். தான் செய்த விபரீத காரியத்தால் தன்னுடன் விளையாடிய நண்பனின் உயிர் போய்விட்டது என்று கூட அந்த சிறுவனுக்கு தெரியவில்லை. இதையடுத்து அந்த சிறுவனை போலீஸ் வாகனத்தில் அழைத்துச்செல்ல போலீசார் முயன்ற போது அவர்களுடன் செல்ல மறுத்து சிறுவன் அடம் பிடித்தான்.

அவனை சமாதானப்படுத்தி போலீஸ் வாகனத்தில் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சம்பவம்தொடர்பாக பேசிய காவல் அதிகாரி, பள்ளியில் படிக்கின்ற சிறுவர்களை ஆக் ஷன் சினிமா, செல்போனில் ஆக்சன் வீடியோ கேம்கள் விளையாட அனுமதிக்காதீர்கள் என்றும் அது சிறுவர்களின் மன நிலையை வன்முறை மிக்கவர்களாக மாற்றுவதாகவும் எச்சரித்தார்

முன்பு பப்ஜியை தடை செய்தது போல முப்பொழுதும் ப்ரீ பயர் செல்போன் கேமில் மூழ்கி கிடக்கும் சிறுவர் சமுதாயத்தை மீட்டெடுக்க இது போன்ற வன்முறை விளையாட்டுக்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies