முகப்பு
சேலம் இரட்டைக் கொலை வழக்கில் வெளிமாநில நபர் கைது..கடன் தொல்லையால் நகைப் பறிப்பு என தகவல் ..
May 12, 2025 01:57 PM
310
சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் மளிகை கடை தம்பதி சுத்தியால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் செளத்ரியை போலீசார் கைது செய்து 11 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் அவரது மனைவி வித்யா சுத்தியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, சந்தோஷ் சௌத்ரியின் நடமாட்டம் அதிகம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
சந்தோஷ் சௌத்ரியின் கால் நகக்கண்ணில் இருந்த ரத்த கறையை ஆதாரமாக வைத்து கைது செய்தனர். அப்போது, 10 ஆண்டுகளாக குடும்பத்தோடு அதே பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் சவுத்ரிக்கு கடன் பிரச்சினை அதிகம் இருந்தால், பாஸ்கரின் கடைக்கு பொருட்கள் வாங்குவது போல சென்று இருவரையும் சுத்தியால் அடித்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடிது சென்றதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu