முகப்பு
இந்தியா மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதல் - 32 விமான நிலையங்களை மே 15 வரை மூட உத்தரவு
May 10, 2025 01:21 AM
1059
32 விமான நிலையங்களை மே 15 வரை மூட உத்தரவு
பாகிஸ்தானின் தொடர் தாக்குதலையடுத்து வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூடுவதற்கு இந்திய விமானநிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கில் பாரமுல்லாவிலிருந்து தெற்கில் பூஜ் வரை, சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு இரண்டிலும் 26 இடங்களில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ள 32 விமான நிலையங்களில் அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் விமான வழித்தடங்களிலும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளை இந்திய விமானநிலைய ஆணையம் விதித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu