முகப்பு
கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி .. பார்வையாளர்களை கவர்ந்த காய்கறி பறவைகள், விலங்குகள்..
May 03, 2025 01:24 PM
53
கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார்.
கண்காட்சியின் நுழைவு வாயிலின் இருபுறமும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மயில்களும், பச்சை மிளகாய் கிளிகளும், காரட் பட்டாம்பூச்சியும், கத்தரிக்காய் முள்ளங்கி கரடியும், ஐயன் திருவள்ளுவர் சிலையும் பார்வையாளர்களை கவர்ந்து வருவதால் பலரும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.