RECENT NEWS

சட்டப் பல்கலைக் கழக விடுதி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

முகப்பு

சட்டவிரோத கட்டுமானங்களை இடித்துத் தள்ளுவதுதான் ஒரே தீர்வு - உச்ச நீதிமன்றம்

May 02, 2025 09:58 AM

1525

சட்டவிரோத கட்டுமானங்களை இடித்துத் தள்ளுவதுதான் ஒரே தீர்வு - உச்ச நீதிமன்றம்

சட்டவிரோத கட்டுமானங்களை இடித்துத் தள்ளுவதுதான் ஒரே தீர்வு - உச்ச நீதிமன்றம்

விதிகளை மீறி கட்டடம் கட்டிவிட்டு, சலுகை காட்டுங்கள் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், அத்தகைய கட்டடங்களை இடித்துத் தள்ளுவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விதிகளை மீறிய பில்டர்களை பாதுகாக்க, மனிதாபிமானம் அல்லது வேறு காரணங்களுக்காக மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதையும் நீதிபதிகள் பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கண்டித்தது.

சட்டத்தை தெரிந்தே மீறுபவர்கள் அபராதம் செலுத்தி தப்பிவிடலாம் என்று நினைப்பதாகவும், இந்த விஷயத்தில் யாருக்கும் விலக்கு அளிக்காமல் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

விதிகளை மதிக்காமல் புறக்கணிப்பவர்களை சட்டம் பாதுகாக்கும் என்றால், அது விதிமீறல்களை ஊக்குவிப்பதுடன், சட்டம்-ஒழுங்குப் பிரச்னைக்கும் வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சட்டவிரோத கட்டுமான வழக்குகளில், அனுதாபத்தைத் தவிர்த்து கடுமையான அணுகுமுறையை நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies