RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

BIG STORIES

மதுர விஜய் தரிசனம்.. ரசிகர்கள் வெறித்தனம்.. பிரச்சார வேன் சேதம்..! தவெக பாய்ஸ் சம்பவம்

May 01, 2025 04:58 PM

122

மதுர விஜய் தரிசனம்.. ரசிகர்கள் வெறித்தனம்.. பிரச்சார வேன் சேதம்..! தவெக பாய்ஸ் சம்பவம்

மதுர விஜய் தரிசனம்.. ரசிகர்கள் வெறித்தனம்.. பிரச்சார வேன் சேதம்..! தவெக பாய்ஸ் சம்பவம்

ஜன நாயகன் படப்பிடிப்பிற்கு கொடைக்கானல் செல்வதற்கு மதுரை விமான நிலையம் வந்திறங்கிய விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்களின் வெறித்தனத்தால், பிரச்சார வேனின் முன்பக்க பம்பர் உடைந்து சேதமானது.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் வந்து உற்சாகமாய் துள்ளிக்குதித்த விஜய்யை காண திரண்ட கூட்டத்தால் மதுரை விமான நிலையம் குலுங்கிய காட்சிகள் தான் இவை..!

ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் புறப்பட்ட விஜய், சென்னை விமான நிலையத்தில் கட்சி தொடங்கிய பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது “ தொண்டர்கள் தனது வேன் மீது ஏற வேண்டாம், தன்னை வண்டி வாகனங்களில் பின் தொடர வேண்டாம்” என்று பொறுப்பாக பேசிவிட்டு புறப்பட்டார்

விஜய்யை வரவேற்க காலை முதலே கட்டியேறிய கூட்டம் உற்சாகத்தோடு நின்றிருந்தனர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டத்தால் விமான நிலைய வளாகமே களைகட்டியது.

தொண்டர்களின் அன்பு பிடியில் சிக்கிய விஜய் பிரச்சார வேனில் ஏறினார். வேனில் நின்று கைஅசைத்தபடியும், கும்பிட்ட படியும் தனது தொண்டர்களை பரவசப்படுத்தினார்

அழகரை வரவேற்று எதிர் சேவை செய்வதை போல அவரை வரவேற்று பூமழை பொழிந்து, பாலும், பன்னீரும் தெளித்து அதகளப்படுத்தினர் தவெக தொண்டர்கள்

திடீரென ஒரு தொண்டர் கூட்டத்தில் நின்றவர்களின் மீது ஏறி வேன் மீது ஏறி விஜய்க்கு கை கொடுக்க முயன்றார். பாதுகாவலர்கள் தடுத்து இறக்கி விட்டனர்

அடுத்தடுத்து அணில் போல தாவிய தொண்டர்களை அமைதிப்படுத்தி தட்டி விட்டு வேனை நகர்த்துவதற்குள் படாத பாடுபட்டனர் விஜய்யின் பாதுகாவலர்கள்

அப்பாட... ஒரு வழியாக விமான நிலைய சாலையை விட்டு இரு வழிச்சாலைக்கு வந்து விட்டோம் என்று பாதுக்காவலர்கள் ஆறுதல் அடைந்த போது, இரு பக்க சாலையிலும் நூற்றுகணக்கான வாகனங்களில் தவெகவினர் விஜய்யை பார்க்கும் ஆவலில் ஹார்ன் அடித்தபடி நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

அதற்குள்ளாக விஜய் வேணுக்குள் சென்று விட்டதால் சாலையில் காத்திருந்தவர்கள் விஜய்யை பார்க்க இயலவில்லை, தொடர்ந்து விஜய்யின் வேன் சாலையில் சென்று கொண்டிருந்த போது அதன் முன்பக்க பம்பர் உடைந்து சேதமடைந்து சாலையில் உரசிக்கொண்டு தொங்கியது. உடனடியாக அதனை கையோடு பிய்த்து எடுத்த நிர்வாகிகள் தொடர்ந்து விஜய்யை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர்

விஜய் வந்து சென்ற பின்னர் விமான நிலைய வளாகத்தில் நூற்றுக்கணக்கான செருப்புக்கள் சிதறிக்கிடந்தது, தடுப்பு கம்பிகள் சாய்க்கப்பட்டு சேதமடைந்து கிடந்தது.

விஜய்யை பார்க்கும் ஆவலில் உற்சாக பானம் அருந்திய ரசிகர் ஒருவர் தலை தொங்கி சாலையில் சரிந்தார் அவரை தண்ணீர் ஊற்றி சக தோழர்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்

எல்லாவற்றுக்கும் மேலாக இளம் பெண் ஒருவர் தான் விஜய்யை பார்த்து விட்டதாக தனது தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்து ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

மொத்தத்தில் விஜய் தரிசனத்தாலும்... ரசிகர்களின் வெறித்தனத்தாலும்.. மதுரை விமான நிலையம் அல்லோல,கல்லோலப்பட்டது

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies