RECENT NEWS

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

சற்றுமுன்

விடியல் பேருந்து மீது கல்வீச்சு போதை இளைஞர் அட்டகாசம்..! பதறி ஓடிய பெண் பயணிகள்..! டாஸ்மாக் உபயத்தால் ரகளை

May 01, 2025 02:25 AM

332

விடியல் பேருந்து மீது கல்வீச்சு போதை இளைஞர் அட்டகாசம்..! பதறி ஓடிய பெண் பயணிகள்..! டாஸ்மாக் உபயத்தால் ரகளை

மதுரை திருமங்கலம் அருகே மது போதையில் அரசு விடியல் பயண பேருந்தை மறித்து ரளையில் ஈடுபட்ட போதை ஆசாமி, பேருந்து கண்ணாடியை உடைத்ததால், பெண் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

மதுரை திருமங்கலத்தில் இருந்து அத்திபட்டிக்கு பணிகளை ஏற்றிக் கொண்டு அரசு விடியல் பயண பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஆலம்பட்டி அருகே தனது டூவீலர் மீது பேருந்து உரசி சென்றதாக கூறி அளவுக்கு அதிகமான போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர்.

பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் பேருந்தை சேதப்படுத்தியும் பேருந்து மீது ஏறி பயணிகளை தகாத வார்த்தையில் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக ரகளை செய்ததால் பேருந்தில் பயணம் செய்த ஒரு சில பயணிகள் போதை இளைஞரிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் ? என்று கேட்டதால், அவர்களை தாக்கினர், பதிலுக்கு அவர்களும் போதை ஆசாமியை தாக்கி புரட்டி எடுத்தனர்

எழுந்து வந்த போதை இளைஞன் பேருந்தின் கண்ணாடியில் உள்ள வைபரை உடைத்து சேதப்படுத்தியதோடு, சாலையில் கிடந்த கல்லை எடுத்து முன்பக்க கண்ணாடி மீது வீசினான்.


பேருந்துக்குள் ஏறி ஆபாசமாக பேசியதால் அவனுக்கு பயந்து பெண்கள் அலறியடித்துக் கொண்டு பின் வாசல் வழியாக இறங்கினர்

அரை மணி நேரத்திற்கு மேலாக பேருந்தை நகர விடாமல் போதை இளைஞர்கள் அட்ராசிட்டி செய்ததால் திருமங்கலம் டூ ராஜபாளையம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தட்டிக்கேட்ட பெண் பயணி ஒருவரை ஆபாசமாக திட்டி அடிக்க ஓடினான்.

டாஸ்மாக் சரக்கின் உபயத்தால் அலப்பறை செய்த அந்த குடிகார இளைஞருக்கு பயந்து பலரும் பதறிபோய் நின்ற நிலையில், அவனது ஊரில் இருந்து வந்த சில இளைஞர்கள் ,போதை ஆசாமியை அங்கிருந்து பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

சம்பவம் முடிந்த பின்னர் சாவகாசமாக வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து பேருந்தில் உள்ள பயணிகளிடமும் பேருந்து நடத்துனரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies