தமிழ்நாடு
பெண் எஸ்.ஐ வீட்டில் 10சவரன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள்..!
Apr 29, 2025 09:56 AM
167
பெண் எஸ்.ஐ வீட்டில் 10சவரன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
புதுக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டிற்குள் நுழைந்து அவரது கணவரை தாக்கி கொள்ளையர்கள் நகைகளை பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நள்ளிரவில் மணப்பட்டி சாலையில் உள்ள திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ சுமையா பானு வீட்டின் பின்பக்க கதவை இரும்பு கம்பியால் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
சத்தம் கேட்டு வந்த எஸ்ஐ சுமையா பானுவின் கணவர் நாகசுந்தரத்தை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
உதவி ஆய்வாளர் சுமையாக பானு கொடுத்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu