முகப்பு
அணில் போல தாவிய அண்ணனின் விழுதுகள் பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறுமிகளுக்கு 'பாஸ்'?
Apr 27, 2025 06:12 AM
378
அணில் போல தாவிய அண்ணனின் விழுதுகள் பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறுமிகளுக்கு 'பாஸ்'?
த.வெ.க.வின் பூத் கமிட்டி கருத்தரங்கு முதற்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்வர்களுக்காக கோவை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 26,27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்த த.வெ.க. தலைவர் விஜயை வரவேற்க வழிநெடுக அவரது ரசிகர்களும், த.வெ.க தொண்டர்களும் குவிந்ததால் விமான நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரச்சார வாகனத்தில் நின்றபடி விஜய் தொண்டர்களை நோக்கி கையசைத்தார். அப்போது "வணக்கம்டா மாப்பிளை தேனியிலிருந்து" என்பது போல, "வணக்கம் நண்பா மரத்தில் இருந்து" என தொண்டர் ஒருவர் திடீரென பிரச்சார வாகனத்தில் தாவினார் . இதனை எதிர்பாராத த.வெ.க. தலைவர் விஜய் அந்த தொண்டருக்கு கட்சியின் துண்டை அணிவித்தார்.
இதனை பார்த்த சக தொண்டர்கள் ஒருவர் பின் ஒருவராக பிரச்சார வாகனத்தில் தாவியதால் உஷாரான விஜய், வாகனத்திற்குள் சென்றார். பின்னர் பவுன்சர்கள் வாகனத்தில் தாவியவர்களை அப்புறப்படுத்தினர்.
விஜயை பார்க்க த.வெ.க கொடியோடு அலப்பறை செய்து கொண்டே விர்சுவல் வாரியர்ஸ் ஆபத்தான முறையில் பைக்கில் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது கார் இடித்ததில் த.வெ.க தொண்டர் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.
மேலும் விஜய் பிரச்சார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரை பைக்கில் பின் தொடர்ந்த தொண்டர் ஒருவர் அவருக்கு கூலிங் க்ளாஸ் கொடுத்த நிலையில் அதனை வாங்கிய விஜய், கண்ணாடியை போட்டுக்கொண்டு எப்படி இருக்கு? என கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
த.வெ.கவின் பூத் கமிட்டி கருத்தரங்கில் 18 வயது நிரம்பாத சிறுவர்களையும் உள்ளே அனுமதித்ததாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள சிறார்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் பாஸ் கொடுத்துள்ளதாக த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் 18 வயது கூட நிராம்பாதவர்களை வைத்து பூத் கமிட்டி கருத்தரங்கா ? என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
த.வெ.க.வின் பூத் கமிட்டி கருத்தரங்கத்தின் நுழைவு வாயிலில் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் குவிந்த நிலையில், கதவை உடைத்து கொண்டு உள்ளே போட்டி போட்டு நுழைந்தனர் .
அதுமட்டுமில்லாமல் த.வெ.க வின் கொள்கை பரப்பு செயலாளரார் ராஜ்மோகன் மேடையில் தொண்டர்களை ஆபத்தான பகுதில் நிற்கவேண்டும் என நீண்ட நேரம் மைக்கில் தெரிவித்தார். இதனை தொண்டர்கள் கேட்காத நிலையில், பொறுமையிழந்த விஜய் அவரே மைக்கை வாங்கி, மின்சார வயர்கள் செல்லும் பகுதியில் யாரும் இருக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். இப்படி ஆரம்பம் முதலே தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஏராளமான அலப்பறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu