முகப்பு
முதலிரவில் முக்காடை விலக்கிய புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த 'மெகா' ட்விஸ்ட்..!
Apr 25, 2025 03:58 AM
11992
முதலிரவில் முக்காடை விலக்கிய புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த 'மெகா' ட்விஸ்ட்..!
மத்தியபிரதேச மாநிலம் ராஜ் கார்க் நகரை சேர்ந்த ஐ டி ஊழியர் கமல், இவர் தனக்கு வசதியான குடும்பத்தில் பெண் வேண்டும் என திருமண ப்ரோக்கரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து திருமண ப்ரோக்கர் காட்டிய பெண்ணை கமல் வீட்டினருக்கு பிடித்து போன நிலையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.
முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், புதுப் பெண் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். புதுப் பெண்ணின் நடவடிக்கையில் கமலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் அணிந்திருந்த முக்காடை விலக்கிய போது கமல் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் திருமணம் செய்த பொண்ணு வேறாகவும் முதலிரவில் அமர்ந்திருந்த பெண் வேறாகவும் இருந்துள்ளது.
உடனே தப்பி ஓட முயன்ற அந்த பெண்ணை மடக்கி பிடித்த கமல், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
இளம் பெண் ஒருவரின் முகத்தை காட்டி திருமணம் செய்து வைத்து நிலையில் மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்குள் வேறு ஒரு பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர் புது பெண் போல் நடித்தும் இருக்கிறார்.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்த நிலையில், முதலிரவில் மாப்பிளைக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துவிட்டு பணம் நகைகளை சுருட்டிச் செல்ல திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
திருமண ப்ரோக்கரை மாப்பிளைக்கு நன்றாக தெரியும் என்பதால் மாப்பிள்ளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு திருமண ப்ரோக்கர் 5 லட்சம் ரூபாயை கொடுத்து வேறொரு பெண்ணை திருட்டில் ஈடுபட வைத்துள்ளார். இதற்காக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் திருமண ப்ரோக்கர் என ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து மோசடி செய்யும் கும்பல் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதலிரவில் பெண்ணை மாற்றி நூதனமாக மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu