RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

மீண்டும்..மீண்டும் ஏன்? நடிகை பவித்ராவிற்கு என்ன ஆச்சு ? சீரியஸான சிகிச்சை?

Apr 23, 2025 04:21 PM

463

மீண்டும்..மீண்டும் ஏன்? நடிகை பவித்ராவிற்கு என்ன ஆச்சு ?  
சீரியஸான சிகிச்சை?

"கடுமையான உடல்நலப் பிரச்னைகள்" உங்கள் பெண் விரைவில் திரும்பி வருவாள்"- நடிகை பவித்ரா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. இவர் நடிகர் சதீஸ் நடித்த 'நாய் சேகர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகை பவித்ரா லக்ஷ்மிக்கு இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் அதிகம். அவர் பார்ப்பதற்கு நடிகை சமந்தா சாயலில் இருப்பதாக அவரது ரசிகர்கள் அடிக்கடி கூறி வந்தனர்.

ஒரு பக்கம் இன்ஸ்டா மற்றொரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பிசியாக இருந்த பவித்ரா லக்ஷ்மி, சமீப நாட்களாகவே வெளியில் அதிகம் தோன்றுவதில்லை. அண்மையில் அவர் பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படங்களில் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டதால் பலரும் ஏராளமான விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை பவித்ரா லக்ஷ்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டேன், இதை செய்தேன்,அதை செய்தேன் என இது போன்ற விஷயங்களைச் சொல்லி, ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது மிகவும் உணர்ச்சியற்றது என தெரிவித்துள்ளார்.

சிலர் தெரிவிக்கும் கருத்துகள் மிகவும் உணர்ச்சியற்றவையாகவும் இதயமற்றவையாகவும் உள்ளது, அது என்னவென்று நான் குறிப்பிட விரும்பவில்லை, நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், நான் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன், அதற்காக நான் சிகிச்சையில் இருக்கிறேன், அதோடு சரியான கவனிப்புடனும் இருக்கிறேன் என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொஞ்சம் மரியாதையும் அன்பும் தான் நான் உங்களிடம் கேட்டேன். இத்தனை நாள் நீங்கள் எனக்குக் கொடுத்தது அவ்வளவுதானா? தயவு செய்து இப்போது அதை மாற்றாதீர்கள்.. உங்கள் பெண் விரைவில் திரும்பி வருவாள் என நடிகை பவித்ரா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies