முகப்பு
தேனிலவிற்கு சென்ற கடற்படை ... அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்..! கலங்கவைத்த காஷ்மீர் தாக்குதல்..!
Apr 23, 2025 04:07 PM
593
தீவிரவாத தாக்குதலில் ஒரே மகனை இழந்த பெற்றோர்... திருமணமான 4 நாளில் நேவி ஆபிசர் உயிரிழந்த சோகம்
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் ஈவு இரக்கமே இல்லாமல் கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரியான 26 வயதே ஆன வினய் நர்வால் என்பவரும் தீவிரவாத கும்பலின் தாக்குதலுக்கு பலியானார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில் லெப்டினன்டாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
வினய் நர்வாலுக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் ஆகி, 19 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக விடுமுறையில் வந்த வினய் நர்வால் தனது ஆசை மனைவியுடன் 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் காஷ்மீர் பஹல்காமிற்கு தேனிலவு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், வினய் நர்வால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெற்றோருக்கு ஒரே மகனான வினய் நர்வால், திருமணம் ஆன 4 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது பெற்றோர் துடிதுடித்து போனதாக கூறப்படுகிறது.
இளம் கடற்படை அதிகாரியான வினய் நர்வாலுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என நினைத்தோம், ஆனால் துரதிஷ்டவசமாக இப்படி ஆகிவிட்டதே என அவரின் உறவினர்கள் வேதனையோடு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் 28 பேர் பலியாகி உள்ளதாகவும் 10 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் 16 பேரது உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu