RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

BIG STORIES

அப்பா பைக்கில்.. டிரிபில்ஸ்.. மாணவன் ஓட்டிய பைக் மோதி 3 வயது குழந்தைக்கு எலும்பு முறிவு..! பெற்றோருக்கு ரூ 25000 அபராதம்

Apr 23, 2025 02:10 AM

959

அப்பா பைக்கில்.. டிரிபில்ஸ்..  மாணவன் ஓட்டிய பைக் மோதி 3 வயது குழந்தைக்கு எலும்பு முறிவு..! பெற்றோருக்கு ரூ 25000 அபராதம்

அப்பா பைக்கில்.. டிரிபில்ஸ்.. மாணவன் ஓட்டிய பைக் மோதி 3 வயது குழந்தைக்கு எலும்பு முறிவு..!

சங்கராபுரம் அருகே எஸ்.வி பாளையம் கிராமத்தில் 7 ஆம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த பைக் மோதி 3 வயது குழந்தைக்கு உடலில் 6 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிறுவனுக்கு பைக் ஒட்ட கொடுத்த பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கபட்டது

செய்யக்கூடாததை செஞ்சி புட்டு... கையிலும் காலிலும் வாங்கிய சில்லறைகளுடன் ஆஸ்பத்திரி பெட்டில் படுத்து கிடக்கும் இவர்கள் தான் அந்த சப் ஜூனியர் பைக்கர் பாய்ஸ்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தை மூன்று சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

எஸ்.வி.பாளையம் கிராமம் அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை கோகுல் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்களுக்கும் கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இரு சக்கர வாகனம் பயங்கரமாக மோதி தூக்கிவீசப்பட்டதால் பலத்த காயம் அடைந்த குழந்தை மயங்கியது.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் , குழந்தை மற்றும் 3 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நான்கு பேரையும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை கோகுலுக்கு தோல்பட்டை, கால் உள்பட 6 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பைக்கை ஓட்டி வந்த 12 வயது சிறுவன் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும், அவனது அப்பா சிலம்பரசனின் பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்டு சென்று வரலாம் என்று தன்னுடன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கின்ற இரு சிறுவர்களை அழைத்துக் கொண்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தனது மகன் தங்களுக்கு தெரியாமல் பைக்கை தூக்கிச்சென்று ஓட்டியதாக சிறுவனின் தந்தை சிலம்பரசன் தெரிவித்த நிலையில், எது எப்படி இருந்தாலும் அவன் ஓட்டிய பைக் சிலம்பரசனுக்கு சொந்தமானது என்பதால் சிறுவனுக்கு பைக் ஓட்டக்கொடுத்து விபத்து ஏற்பட வழிவகுத்ததாக சிலம்பரசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மோட்டார் வாகன சட்டப்படி அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

பெற்றோர் தங்கள் வீட்டு சிறு பிள்ளைகளை இரு சக்கர வாகன ஓட்டுவதற்கு ஊக்கமளிக்க கூடாது என்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி சிக்கினால் சம்பந்தப்பட்ட பைக் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies