RECENT NEWS

உலகின் மிகச் சிறந்த பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்! 32 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பின்னணி

BIG STORIES

அடேய்.. அந்தம்மாவ விடுங்கடா.. கொலக்கேசுல உள்ள போயிராதீங்க.. பொன்முடிக்கு எதிரான போராட்டம்..!

Apr 22, 2025 01:25 AM

778

அடேய்.. அந்தம்மாவ விடுங்கடா.. கொலக்கேசுல உள்ள போயிராதீங்க..
பொன்முடிக்கு எதிரான போராட்டம்..!

அடேய்.. அந்தம்மாவ விடுங்கடா.. கொலக்கேசுல உள்ள போயிராதீங்க.. பொன்முடிக்கு எதிரான போராட்டம்..!

தர்மபுரியில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து பா.ஜ.க சார்பில் நடந்த போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பங்கேற்ற பெண் ஒருவர் மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டார்

பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து, தர்மபுரி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பெண்கள் பொன்முடியின் உருவப்படம் இருந்த பேணரை கிழிக்க முயன்ற நிலையில் போலீசார் அதனை தடுத்து இழுத்தனர்

அப்போது போலீசாருக்கும் , பா.ஜ.கவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, பொன்முடியின் பேனரை போலீசிடம் கொடுக்கவிட்டாமல், மகளிரணியின் பின்பக்கம் இருந்து இருவர் இழுக்க, நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு பெண் அவர்களிடம் இருந்து தனது உயிரை காத்துக்கொள்ள ஒரு நிமிடம் திணறிப்போனார்

அதிர்ஷ்டவசமாக பேனர் கிழிந்ததால் அந்த பெண் உயிர் தப்பினார், இல்லையென்றால் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும், அதன் பின்னரும் அடங்காத பா.ஜ.கவினர் பொன்முடி படத்தை அடிக்க துடைப்பத்தை கையில் எடுக்க அதனையும் போலீசார் கைப்பற்ற முயன்றதால் போலீசாரும் கடும் வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் சாலையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இறுதியில் காவல் துறையினரின் அனுமதி பெறாமல் ஆர்பாட்டம் செய்ததாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாலிமர் செய்திகளுக்காக தர்மபுரி செய்தியாளர் குருபிரசாத்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஏங்க.. அந்த பய பேச்சக்கேட்டு கூமாபட்டி ஐலாண்டு போன இன்ஸ்டா ஊர் சுற்றிகள் ஏமாற்றம்..!  “ஏங்க..வராதீங்க..” பொதுப்பணித்துறை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies