BIG STORIES
"ஆசீர்வாதம் பண்றேன்பா" அப்போ.. காசு வாங்காதது இதுக்கு தானா? உஷாரா இருங்க மக்களே..!
Apr 20, 2025 03:07 AM
1024
"ஆசீர்வாதம் பண்றேன்பா" அப்போ.. காசு வாங்காதது இதுக்கு தானா? உஷாரா இருங்க மக்களே..!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் கடந்த 18 ஆம் தேதியன்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் செல்வதற்காக சென்னை கோயம்பேடு தேர்தல் ஆணையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளனர்.
இருவரும் பேருந்திற்காக`காத்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வந்த மூன்று திருநங்கைகள் அந்த இளைஞனிடம் ஒரு காயினை கொடுங்கள், ஆசீர்வாதம் செய்து விட்டு பர்ஸில் வைத்தால் பணம் பெருகும் என காயினை வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் மந்திரம் சொல்வது போல கூறிவிட்டு, பர்ஸில் நானே வைத்துவிடுகிறேன் என திருநங்கை ஒருவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை நம்பி அந்த இளைஞனும் பர்ஸை திறந்தபோது உள்ளே இருந்த 500 ரூபாயை அந்த திருநங்கை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
உடனே அருகில் இருந்த இளம்பெண், அந்த திருநங்கையிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றபோது மூவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. முதலில் 10 ரூபாய் கொடுத்தபோது வாங்க மறுத்து, சிறிய காயினை கேட்டது இதற்கு தான் என அந்த இளைஞருக்கு பின்பு தான் தெரியவந்துள்ளது.
அங்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவர், இந்த சம்பவம் குறித்து சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பொது இடங்களில் தங்களது பர்ஸை யாருக்கும் திறந்து காட்ட வேண்டாம் எனவும், இது போல நடந்தால் உடனே கூச்சலிடுங்கள் எனவும் அந்த இருவருக்கும் சமூக ஆர்வலர் அறிவுரை வழங்கினார்.
கோயம்பேட்டில் இதுபோன்று பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதாகவும் உடனடியாக காவல்துறையினர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu