RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

சூர்யாவுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் நடிகனில் எவனாவது சிக்ஸ் பேக் வைத்திருக்கிறானா..? சிவக்குமாரின் ஆதங்கம் சரியா?

Apr 19, 2025 11:47 AM

350

சூர்யாவுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் நடிகனில் எவனாவது சிக்ஸ் பேக் வைத்திருக்கிறானா..? சிவக்குமாரின் ஆதங்கம் சரியா?

சூர்யாவுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் நடிகனில் எவனாவது சிக்ஸ் பேக் வைத்திருக்கிறானா..?

தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்பாகவும், பின்பும் எவரும் உடலில் சிக்ஸ் பேக் வைத்ததில்லை என்று ரெட்ரோ பட விழாவில் , சூர்யாவின் தந்தை சிவக்குமார் பேசி உள்ளார்..


நடிகர் சிவகுமார் தனது மகன் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட விழாவில் தமிழ் சினிமாவில் இதுவரை சூர்யாவுக்கு முன்பும் சரி பின்னரும் சரி எந்த ஒரு நடிகரும் உடலில் சிக்ஸ் பேக் வைத்ததில்லை என்று சவால் விடும் வகையில் மேடையில் பேசினார்.

அவரது இந்த கருத்து எந்த அளவிற்கு உண்மை என்று ஆராய்ந்த போது, தமிழ் திரையுலகில் கட்டுமஸ்தான உடலுக்கு சொந்தக்காரராக முதலில் பார்க்கப்பட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர்.. தான் நினைவிற்கு வந்தார்...

அவருக்குப் பிறகு காக்கி சட்டை படத்தில் கமலஹாசன் தனது உடற்பயிற்சி சாகசத்தை நிகழ்த்திக் காட்டினார். தற்போது வரை ஒரு நடிகரும் கயிற்றின் உதவியின்றி இப்படி பைப்பில் ஏறி இறங்கியது கிடையாது

ஆனால் அவர் உடலில் சிக்ஸ் பேக் வைத்தது கிடையாது. நடிகர் அர்ஜுன் தான் அறிமுகமான படத்தில் இருந்து ஒவ்வொரு படத்திலும் தனது உடல் அழகை காட்டி நடித்திருப்பார். காரணம் 1980 களில் இருந்து இன்றுவரை சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகர் அர்ஜூன் மட்டுமே, பத்து நாள் உடற்பயிற்சி செய்தால் தனக்கு சிக்ஸ் பேக் வந்துவிடும் என்கிறார் அர்ஜூன்

1990 ல் வெளியான புலன் விசாரணை படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் சட்டையை கிழித்துக்கொண்டு தனது உடல் பராக்கிரமத்தை காட்டியதால், ஆணழகன் சரத்குமார் அடுத்த 10 ஆண்டுக்கு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆக்சன் நாயகனாக வலம் வந்தார்

தில் படத்தில் ஆரம்பித்த விக்ரம் , அண்மையில் வெளியான வீர தீர சூரன் வரை உடலை வருத்தி நடித்துக் கொண்டிருக்கிறார்

அவருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹீரோக்களில் சூர்யா, நந்தா படத்தில் தனது உடலை வருத்தி மேம்படுத்தினாலும், வாரணம் ஆயிரம் அவரை சிக்ஸ் பேக் உடைய நாயகனாக திரையில் காட்டியது

ஒல்லி பிச்சான் நடிகர் என்று விமர்சிக்கப்பட்ட தனுஷ், பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் கோடு அதகளம் செய்தார்

வழக்கமாக நாயகர்கள் சண்டை காட்சிகளில் சட்டையை கழட்டி போட்டு விட்டு சிக்ஸ் பேக் காட்டுவார்கள் ஆனால் வித்தியாசமாக விஷால் , சத்தியம் படத்தில் பாடல் காட்சிக்காக சிக்ஸ் பேக்கை காண்பித்து நடித்து இருந்தார்.

குண்டான நடிகர் தொப்பை நடிகர் என்றெல்லாம் எதிர்த்தரப்பினரால் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகிய அஜித்குமார் விவேகம் படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தார்

நடிகர் அருண் விஜய் தற்போது வரை அனைத்து படங்களிலும் சிக்ஸ் பேக்கோடு தான் இருக்கிறார், நடிகர் பரத், விஷ்ணு விஷால், ஆர்யா , சூரி , கட்டதுரை நடிகர் ரியாஸ் கான் , மொட்டை ராஜேந்திரன் என தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் நடிகர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நடிகர்களை எல்லாம் விட கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் கடுமையாக உழைக்கின்ற லட்சோப லட்ச உழைப்பாளிகளின் உடல் கூட பழனி படிக்கட்டுகள் போல சிக்ஸ்பேக், எயிட் பேக்குகளாக இருக்கிறது.

அவரவர் பிழைப்பிற்காக தங்கள் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர் ரசிகர்கள்.

ஒரு தந்தை என்ற முறையில் சிவக்குமாருக்கு சூர்யாவின் செயல் வியப்பாகவும் மெச்சத்தகுந்ததாகவும் இருப்பதில் தவறில்லை, அதே நேரத்தில் மேடையில் தமிழ் திரையுலகினர் முன்னிலையில் தமிழ் சினிமாவில் உள்ள மற்ற நடிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் அவர் இப்படி பேசியிருக்கக் கூடாது என்பதே சினிமா ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies