முகப்பு
மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகல் - பின்னணியில் மல்லை சத்யா?
Apr 19, 2025 06:51 AM
4511
மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகல்
தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செய்திகளை கசியவிடுகிறார் - துரை வைகோ
நான் முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததை மதிமுகவில் ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை - துரை வைகோ
மதிமுக மீதும் வைகோ மீதும் பழி சுமத்தும் ஒருவருக்கு மத்தியில் என்னால் தலைமைச் செயலாளர் பதவியில் தொடர முடியாது - துரை வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடனான மோதலை தொடர்ந்தே பதவியில் இருந்து துரை வைகோ விலகியுள்ளதாக தகவல்
நாளை மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் துரை வைகோ
மல்லை சத்யாவிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்க முடியாமல் துரை வைகோ விலகியுள்ளதாக தகவல்
நாளை நடைபெறும் மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன், பிறகு எந்த முக்கிய கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன் - துரை வைகோ
துரை வைகோ விலகல் - காரணம் என்ன?
கட்சிவிரோத நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபடுவதாக துரை வைகோ கருதுகிறார்
மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் துரை வைகோ வலியுறுத்தி வந்ததாக தகவல்
மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
மல்லை சத்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மதிமுக நிர்வாகிகளுக்கு வைகோ தரப்பில் இருந்து கண்டிப்பு
மல்லை சத்யாவிற்கு எதிராக யாரும் தீர்மானம் நிறைவேற்ற கூடாது என வைகோ தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது
நாளை நடைபெறும் மதிமுக நிர்வாக குழு கூட்டத்திற்கு முன்பாக மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க துரை வைகோ கெடு என தகவல்
துரை வைகோவின் வலியுறுத்தலை ஏற்று மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வைகோ மறுத்துவிட்டதாக தகவல்
மல்லை சத்யா மதிமுகவில் நீடித்தால் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் நீடிக்க முடியாது என துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu