தமிழ்நாடு
குவாட்டரும்.. கோழிபிரியாணியும் .. கேட்டு போலீஸ்காரரிடம் அடம்..! போக்சோ கைதி அலப்பறை..!
Apr 17, 2025 02:19 PM
218
குவாட்டரும்.. கோழிபிரியாணியும் .. கேட்டு போலீஸ்காரரிடம் அடம்..! போக்சோ கைதி அலப்பறை..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட போதை இளைஞர் ஒருவர், குவாட்டரும் கோழிபிரியாணியும் வாங்கிவரச் சொல்லி போலீசாரிடம் அடம் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரனூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஐயப்பன் . இவர் மது போதையில் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சேர்ந்த அவரது காதலியை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடப்பட்டதாக கூறப்படுகின்றது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு இளைஞர் ஐயப்பனை ஊர் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
சட்டை பணியன், பேண்டு கிழிந்த நிலையில் இருந்த ஐயப்பனிடம், கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரித்தனர். 17 வயது சிறுமியை காதலித்து வீட்டை விட்டு அழைத்துச்சென்றதால் அய்யப்பன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்ததாக கூறப்படுகின்றது.
ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அய்யப்பன், மீண்டும் தனது காதலியை பார்ப்பதற்காக மது அருந்தி விட்டு சென்றதாகவும், வழியில் அமர்ந்திருந்த மூதாட்டியை பார்த்த போது தனது காதலி என தவறாக நினைத்து கட்டியனைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளான்.
நடந்ததை விவரிப்பதற்குள்ளாக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தன்னை கொத்துக்கறி போட்டு விட்டனர் என்று போலீசாரிடம் தெரிவித்த அய்யப்பன் போலீசாரிடம் தனக்கு புது பேண்டு சட்டையும், குவாட்டரும் கோழிபிரியாணியும் வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்
தனது பழைய ஆடையை தருகிறேன் என்று போலீசார் கூறிய போதும் தனக்கு அளவு சரியாக இருக்காது புதிதாக வாங்கித்தாருங்கள் என்று தலைமுடியை கோதிவிட்டு அலப்பறையை கொடுத்தான் குடிகாரன் அய்யப்பன்.
இந்த வீடியோ வெளியான நிலையில் அய்யப்பனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu