தமிழ்நாடு
கேண்டீன் ஷெட்டை ஜே.சி.பி மூலம் இடித்ததாக புகார்.. தி.மு.க வட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு..
Apr 17, 2025 09:14 AM
123
கேண்டீன் ஷெட்டை ஜே.சி.பி மூலம் இடித்ததாக புகார்.. தி.மு.க வட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு..
சென்னை வடபழனியில் திமுக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் என்று கூறி கேண்டீன் ஷெட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்ததாக பால்துரை என்பவர் அளித்த புகாரின் பேரில் திமுக வட்டச் செயலாளர் சூரிய சிவகுமார் மற்றும் பகுதி பிரதிநிதி சீனிவாசன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், சூரிய சிவக்குமார் திமுகவின் 129 வட்ட செயலாளராகவும், சீனிவாசன் என்பவர் திமுக விருகம்பாக்கம் பகுதியின் பிரதிநிதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனவும் தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக பால்துரை மீது எம்எல்ஏ பிரபாகர் ராஜா விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu