முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
ஈரான் துறைமுகத்தில் சக்தி வாய்ந்த வெடி விபத்து
Apr 27, 2025
முகப்பு
பா.ஜ.க.வுடனான கூட்டணியால் இ.பி.எஸ். மீது ஜெயக்குமார் அதிருப்தி?.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கும்..
Apr 14, 2025 07:30 AM
229
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்த ஜெயக்குமார், இ.பி.எஸ். டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
அதேபோல், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அறிவிப்பிற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு, கருத்து தெரிவிப்பு என எதையும் மேற்கொள்ளாமல் ஜெயக்குமார் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ். புகைப்படங்களுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ஜெயக்குமார், இந்த ஆண்டு ஜெயலலிதா புகைப்படத்தை மட்டும் பயன்படுத்தி வாழ்த்து கூறியுள்ளார்.
இதனிடையே கோடம்பாக்கத்தில் இன்று பேட்டியளித்த ஜெயக்குமார், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவேன் என ஒருபோதும் சொல்லவில்லை என விளக்கமளித்தார்.