முகப்பு
சீனாவில் ரூ 2200 கோடி செலவில் 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்
Apr 13, 2025 01:38 AM
882
சீனாவில் ரூ 2200 கோடி செலவில் 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்
சீனாவில் 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஹூவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் திறப்பதற்கு தயாராக உள்ளது.
உலகின் மிகவும் உயரத்தில் கட்டப்பட்ட பாலம் என்ற பெருமையை இது அடைய உள்ளது.பொறியியல் கலையின் மாஸ்டர் பீஸ் என்று வர்ணிக்கப்படும் இந்தப் பாலம் உள்கட்டுமானத்தில் சீனாவின் அசுர வளர்ச்சியையும் பறைசாற்றுகிறது.
மூன்று ஆண்டுகளில் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டீல் கட்டுமானம் சுமார் 22 ஆயிரம் மெட்ரிக் டன்கள் எடை கொண்டுள்ளது. இதன் மொத்த செலவு 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் அமைக்கப்பட்டதால் அப்பகுதியில் ஒருமணி நேரம் செல்ல வேண்டிய தூரத்தை ஒரு நிமிடத்தில் சென்றடையலாம். இப்பாலத்தை மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற்றவும் சீனா திட்டமிட்டுள்ளது
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu