RECENT NEWS

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

BIG STORIES

வள்ளி விலாஸ் கடையில் நகைகள் தரமில்லையா .. அதிகாரிகள் சொல்வது என்ன 5.4 கிலோ நகைகள் பறிமுதல் ஏன்

Apr 12, 2025 02:00 AM

5711

வள்ளி விலாஸ் கடையில் நகைகள் தரமில்லையா ..
அதிகாரிகள் சொல்வது என்ன 5.4 கிலோ நகைகள் பறிமுதல் ஏன்

வள்ளி விலாஸ் கடையில் நகைகள் தரமில்லையா .. அதிகாரிகள் சொல்வது என்ன 5.4 கிலோ நகைகள் பறிமுதல் ஏன்

நாளுக்கு நாள் தங்கம் விலை எகிறிக்கொண்டிருக்கும் நிலையில் பண்ருட்டி வள்ளி விலாஸ் தங்கமாளிகை கடையில் இருந்து போலியாக ஹால்மார்க் முத்திரையிடப்பட்டதாக 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை கிலோ தரம் குறைந்த தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

முந்திரிக்கும்.. பலாப்பழத்துக்கும்... பெயர் பெற்ற பண்ருட்டியில் உள்ள வள்ளி விலாஸ் கடையில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரிவிக்கின்றனர் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்..!

இந்திய தர நிர்ணயம் எனப்படும் BIS அமைப்பு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் குறியீடுகளை வழங்கி வருகிறது. தங்க நகைகளில் தங்கத்தின் அளவு , தூய்மை பற்றி அறிய இந்த 916 எனப்படும் ஹால்மார்க் முத்திரை பயன்படுகிறது. தங்கத்திற்கு 2000வது ஆண்டிலும், வெள்ளிக்கு 2005 ஆண்டிலும் ஹால்மார்க் முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு முதல் HUID என்னும் 6 இலக்க தனித்துவ எண் ஹால்மார்க் குறியீடு எண் பெற்ற நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையமான பிஐஎஸ் அறிவித்துள்ளது.

இதற்காக இரண்டு வருடம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு அந்த காலகட்டத்தில் பழைய நகைகளை விற்பனை செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்திருந்தது. அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து HUID ஹால்மார்க் கட்டாயம் என தெரிவித்தது. இந்நிலையில் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள வள்ளி விலாஸ் தங்கமாளிகை என்ற நகைக்கடையில் ஹால்மார்க் இல்லாமலும் போலி ஹால்மார்க் முத்திரையுடனும் தரமற்ற நகைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன

இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் நகை கடையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஹால்மார்க் 6 டிஜிட் எண் இல்லாமலும், போலி ஹால்மார்க் முத்திரையிட்டும் நகைகள் விற்பனை செய்வதை உறுதி செய்தனர். இதனை அடுத்து 4.8 கோடி மதிப்புள்ள 5.4 கிலோ தங்க நகைகள் இதேபோன்று இருப்பதை அறிந்த அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

நகைக்கடை உரிமையாளருக்கு போலி ஹால்மார்க் நகை விற்பனை செய்தது தொடர்பாக சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்த அதிகாரிகள் குற்றம் உறுதியானால் நகைக்கடை உரிமையாளருக்கு ஒரு வருட தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் அல்லது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் 5 மடங்கு மதிப்பு அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கும் நிலையில் தங்க நகைகள் வாங்குபவர்கள் , நீங்கள் வாங்கும் அனைத்து வகையான நகைகளிலும் ஹெச் யூ ஐ டி என்ற ஹால்மார்க் எண் உள்ளதா ? என்பது குறித்து ஆய்வு செய்து பி ஐ எஸ் செயலியில் சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஒருவேளை போலி ஹால்மாக்கில் தரமற்ற நகைகள் விற்கப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள கடையின் உரிமையாளர் சரவணன், நாங்கள் தரமான தங்கத்தை தான் விற்று வந்தோம் அதிகாரிகள் கடையில் விற்காமல் இருந்த பழைய ஹால்மார்க் முத்திரையிட்ட தங்கத்தை கைப்பற்றியது உண்மை தான், அவை போலி நகைகள் அல்ல, அசல் தங்க நகைகள், கைப்பற்றப்பட்ட நகைகளை விற்க கூடாது என்பதற்காக ஒரு பெட்டியில் போட்டு சீல் வைத்து அதனையும் எங்களிடமே கொடுத்து விட்டு சென்றனர். அறிவியல் பூர்வ சோதனையின் போது தங்கத்தின் தரத்தை நிரூபிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies