தமிழ்நாடு
“நண்பா.. ஐ எம் வெயிட்டிங்..” குட் பேட் அக்லி படம் மூலம் விஜய்க்கு, அஜீத் சொல்லும் சேதி ..! முதல் நாளில் ரூ.50 கோடி வசூல்..!
Apr 11, 2025 01:22 AM
77
“நண்பா.. ஐ எம் வெயிட்டிங்..” குட் பேட் அக்லி படம் மூலம் விஜய்க்கு, அஜீத் சொல்லும் சேதி ..! முதல் நாளில் ரூ.50 கோடி வசூல்..!
அஜீத்தின் 'குட் பேட் அக்லி' படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, படத்தில் விஜய் ரெபரன்ஸ், திரிஷா டச், கமல் எவர் கிரீன் ஹிட் பாடல் என இளசுகளை கவரும் விதத்தில் இருப்பதால் முதல் நாளில் உலக அளவில் 50 கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இப்படி ஒரு அஜீத் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என்று ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது அஜீத்தின் குட் பேட் அக்லி திரைப்படம்..!
மனுஷன் என்னமா ஆக்ட் பண்ணிருக்காரு என்று திரையில் வரும் தங்கள் ஆசை நாயகனை, தரையில் கால்படாமல் அமர்க்களமாக கொண்டாடி தீர்க்க படத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது..?
இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை அஜீத்தின் டிரான்ஸ் பர்மேசன் ஒவ்வொன்றும் அட்டகாசமாய் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்
படத்துல மாஸ் சீன் இருக்கா.. என்று கேட்டால் படமே மாஸாக இருப்பதாக உற்சாக கூச்சல் போடுகின்றனர் அவரது ரசிகர்கள். முதல் முறையாக விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது குட் பேட் அக்லி..! காரணம் படத்தில் இரு இடங்களில் விஜய் படங்களின் ரெஃபரன்ஸ் காட்டி இருப்பதாக சொல்லப்படுகின்றது.
விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் இடைவேளையின் போது ஐ ஏம் வெயிட்டிங் என்று டயலாக் சொல்வதை துப்பாக்கி படத்தில் இருந்து வழக்கமாக்கினார்..! இந்த படத்தின் இடைவேளையில் நண்பா, ஐ எம் வெயிட்டிங் என்று அஜீத் சிரித்துக் கொண்டே தலையாட்டுவது விஜய்யை தொடர்ந்து நடிக்க அழைப்பது போல இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்
கமல்ஹாசனின் சகலகலாவல்லவன் படத்தில் இடம் பெற்ற முக்கியமான பாடல் ஒன்று படத்தின் சண்டைக்காட்சியில் பட்டையை கிளப்புவதாகவும், ஒத்தரூபா பாடல், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல், ஆலுமா டோலுமா பாடல் கலவை என்று பின்னணி இசையில் ஜிவி பிரகாஷ்குமார் திரையரங்கை உண்மையிலேயே சிதறவிட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
திரிஷாவின் கில்லி டச், அஜீத்தின் பழைய ஹிட் படங்களில் இடம் பெற்ற டயலாக்குகளின் டிபரண்ட் மாடுலேசன் என்று கலகலப்பான ஆக் ஷன் அஜீத்தை , இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன் திரையில் கொண்டு வந்ததே ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு காரணமாக சொல்லப்படுகின்றது.
பண்டிகை அல்லாத நாளில் வெளியான குட் பேட் அக்லி படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாயையும் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாயையும் தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருப்பதால் வார இறுதி நாட்களில் படத்தில் வசூல் எகிறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu