முகப்பு
பேய்க்கும் - பேய்க்கும் கல்யாணம்... என்னப்பா? இப்டி கிளம்பிட்டாங்க.. ரொம்ப பயமுறுத்துரீங்களேபா..
Apr 10, 2025 01:37 PM
157
ஜோடிப் பொருத்தம் To வரதட்சணை.. பேய் கல்யாணங்கள் எப்படி நடக்கும்..?
பேய்க்கும் - பேய்க்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பாக்குது... என ராகவா லாரன்ஸ் சொல்லக் கேட்டிருப்போம்... அதே மாதிரி சீனாவுல பேய்க்கும் பேய்க்கும் கல்யாணமே பண்ணி வைக்குற வினோத சடங்கு, இப்போ ஒரு விபரீதமான டிவிஸ்ட்ல போய் முடிஞ்சுருக்கு...
ஏற்கெனவே செத்துப் போன 2 பேரது ஆன்மாக்களுக்கு கல்யாணம் நடத்துறது தான் இந்த ‘பேய் கல்யாணம்..’ இந்த சடங்குல நிஜமாவே நடக்குற கல்யாணம் போலவே எல்லா சடங்குகளும் நடக்குமாம்..
ஆன்மீக சக்தி மிக்க ஃபெங் ஷூய் மாஸ்டர்கள் தான் ஜாதகம் பார்ப்பது போல 2 பேய்க்கும் பொருத்தம் பாப்பாங்கலாம்..
சாதாரண திருமணங்கள் போலவே, பேய்களுக்கு அழகு, உயரம் கூட ஒப்பிட்டுப் பார்ப்பாங்களாம்.. அதுக்காக அவங்க உயிரோடு இருந்தபோது எடுத்த போட்டோவைப் பார்த்து மருமகனையும், மருமகளையும் ஓகே செய்வார்களாம்.
இன்னொரு சுவாரஸ்யம் என்னன்னா, பேய்க்கே கல்யாணம் பண்ணாலும் வரதட்சணையில இருந்து தப்ப முடியாது.. மணப் பெண்ணோட குடும்பத்துக்கு பேப்பரால ஆன நகை, வீடு, கார் எல்லாம் மாதிரிகளா செஞ்சு கல்யாணத்துக்கு முன்னாடியே மேடையில வைக்கனுமாம்..
அவர்களோட ஃபோட்டோக்கள பதாகை மாதிரி வடிவமைச்சு, சுடுகாட்டிலேயே வெச்சு கல்யாணமும் நடக்கும்..
கல்யாணத்துக்கு அப்புறம், மணப்பெண்ணோட எலும்புகளை தோண்டி எடுத்து, அதை மணமகனோட எலும்புக்கூட்டுக்கு அருகே வைத்துவிட்டு குழியை அடைத்துவிடுவார்களாம். .
இந்த சடங்கு கேக்க காமெடியா இருந்தாலும், கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே மகனையோ, மகளையோ பறிகொடுத்த அம்மா அப்பாவுக்கு அவங்களோட கடமைய நிறைவேத்துன மாதிரியான ஒரு திருப்திய கொடுக்கும்னு நம்பப்படுது..
இதேமாதிரி, திருமணம் செய்ய ஆசைப்பட்ட 2 பேர் இறந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் இதேபோல திருமணம் நடத்துவாங்களாம். அப்போ, கைகூடாத காதல கல்யாணத்துல முடிச்சு வெச்ச ஆத்மாக்களோட ஆழ்ந்த ஏக்கம் தீர்க்கப்படும்-ன்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. .
கிட்டத்தட்ட 3000 ஆண்டு பழமையான இந்த சீன சடங்குல இப்போ ஒரு ட்விஸ்டும் வந்திருக்கு... திருமணம் செய்ய ஆசைப்பட்டவங்கள்-ல ஒருவர் இறந்துட்டாலும், உயிரோடு இருப்பவங்கள இறந்துபோனவரோட பதாகைக்கு திருமணம் செஞ்சு வைக்குறது தான் அது.. அந்த பதாகைக்கு இறந்தவரோட ஆடையும் அணிவிக்கப்படும்.. இது, சீனாவோட வடக்கு மத்திய மாகாணங்கள்ல பிரபலமாகி வருகிறது...
அதுக்கப்புறம் உயிரோட இருக்குவங்களுக்கு எத்தனை திருமணம் ஆனாலும், அந்த இறந்து போன ஆத்மா தான், முதல் மனைவி அல்லது கணவன்-னு சொல்லப்படுது..
இதே மாதிரியான பேய் கல்யாணம், இப்போ மலேசியாவுல சமீபத்துல கார் விபத்துல இறந்துபோன காதல் ஜோடிக்கும் நடத்தப்பட்டிருக்கு..
இவ்வளவு ஏன்? நம்ம நாட்லயே கர்நாடகாவுல கடந்த ஆண்டு 30 வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோன தன்னோட பெண் குழந்தைக்கு தன்னோட ஜாதியிலயே இறந்து போன இன்னொரு ஆணோட வரன் வேணும்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தாங்க. அப்டி ஒரு ஆண் குழந்தை இறந்துபோன குடும்பத்தத் தேடிப் பிடிச்சு ஆட்டம் பாட்டத்தோட அலப்பறையா திருமணமும் செஞ்சு வெச்ச சம்பவமும் உள்ளது..
இதுல இருந்து இன்னொரு விஷயமும் தெளிவா தெரியுது... பல நாடுகள்லயும், செத்துப் போய் பேயே ஆனாலும் சாதியையும், வரதட்சணையையும் விட மாட்டாங்க போல...
தைவான்லயும் பேய் கல்யாணம் இருக்கு. ஆனா, அவங்க ரேண்டம் ஆ மாப்பிள்ளைய தேர்ந்தெடுப்பாங்களாம்.. திருமண வயதுல மணப்பெண் இறந்துட்டா, சிவப்பு நிறப் பைக்குள்ள இறந்தவரோட பணம், முடி, நகம் எல்லாத்தையும் வைத்து அதை சாலையில் வீசி விடுவார்களாம். அதை முதலில் எடுப்பவர்தான் அந்த இறந்த பெண்ணின் மணமகன் அப்டின்னு நம்பப்படுது.. ஆனா, அதை எடுத்தவருக்கு பேட் லக் என்றும் அந்த பேய் அவர்கள விடாதுன்னும் ஒரு திகிலக் கிளப்புறாங்க....
அது சரி இந்த கல்யாணம் நடந்த விஷயம் அந்தப் பேய்க்குத் தெரியுமான்னு கேட்டா, ‘நானே செத்துப்போன டென்சன்ல இருக்கேன்’ என்று தான் பதில் சொல்லுமோ என்னமோ...
இருந்தாலும்... பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ...யோ...சி...டோய்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu