தமிழ்நாடு
''புகைப்படங்களை ஜிப்லி வரைகலையாக மாற்றும் போது எச்சரிக்கை தேவை'' - சைபர் கிரைம்
Apr 09, 2025 12:22 PM
346
''புகைப்படங்களை ஜிப்லி வரைகலையாக மாற்றும் போது எச்சரிக்கை தேவை'' - சைபர் கிரைம்
இணையதளத்தில் வைரலாகி உள்ள ஜிப்லி வரைகலைக்காக, அங்கீகரிக்கப்படாத செயலிகள் மற்றும் இணையதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜிப்லிக்காக ஏ.ஐ. உள்ளிட்ட தளங்களில் வழங்கப்படும் புகைப்படங்களை விஷமிகள் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படங்களை வைத்து பயோமெட்ரிக் தகவல்களை இணையதளங்களால் பெற இயலும் என்பதால் அதன் மூலம் விஷமிகள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கூட திருட முடியும் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஜிப்லி வரைகலைக்காக பயன்படுத்தும் தளங்கள் வைரஸ் மூலமாக நமது செல்போன்களைக்கூட கட்டுப்படுத்த முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu