அயோத்தியில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ திருவிழாவை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி..!

0 2245

அயோத்தியில் 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ நிகழ்வை தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டின் 15 லட்சம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்ட சாதனை இந்த ஆண்டு தீப உற்சவ விழாவில் முறியடிக்கப்பட்டது. இது பிரமிக்க வைக்கும் மறக்க முடியாத விழா எனத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தீப உற்சவத்தின் படங்களை பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஜனவரி மாதம் அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் சரயூ ஆற்றங்கரைகளிலும் தங்கள் வீடுகளிலும் விளக்கேற்றி வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments