பி.எஸ்.ஜி கல்லூரியில் ராகிங்.. பொறியியல் படிப்பும் போச்சு, கல்லூரி வாழ்க்கையும் போச்சு .. மொட்டை மாணவர்களுக்கு கையில காப்பு..!

0 16043

கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் விடுதியில் மது அருந்த பணம் கேட்டு இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவர்கள் சேர்ந்து மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

கையில் கிடைத்த துணியாலும்... துண்டுப்பேப்பராலும் முகத்தை மூடியபடி ... வெட்கப்பட்டாலும், மிளா போல நடந்து செல்லும் இவர்கள் தான் ஓசிக்குடிக்கு காசு தரமறுத்த இரண்டாம் ஆண்டு மாணவனை மொட்டை அடித்த சீனியர் டவுசர் பாய்ஸ்..!

கோவை அவிநாசி சாலையில் பிரபலமான பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. தமிழகத்தில் புகழ் பெற்ற கல்லூரியான இங்கு இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை கடந்த 6 ஆம் தேதி அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் பொறியியல் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த மாணவர் பணம் தர மறுக்கவே 7 சீனியர் மாணவர்கள் சேர்ந்து இரண்டாமாண்டு மாணவருக்கு டிரிம்மரை வைத்து தலைமுடியை மழித்து மொட்டை அடித்து, நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து ராகிங் கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது. 

இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோருக்கு தெரியவரவே உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 7 மாணவர்களையும் கைது செய்து பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த மாணவர்கள் மீது ராக்கிங் செய்தல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேறு மாணவர்களுக்கும் இவர்களால் ராகிங் பிரச்சனை உண்டானதா ? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, கல்லூரி நிர்வாகம் ராக்கிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மாணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

படிக்கின்ற காலத்தில் படிப்பை மறந்து மதுவுக்கு அடிமையானால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த ராக்கிங் சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments