பிரதமர் நரேந்திர மோடி மீது தி.மு.க குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கலாம் - அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடி மீது தி.மு.க குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கலாம் என்றும், இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற என் மண் - என் மக்கள் எனும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் எந்த மொழிக்கும் எந்த கலாச்சாரத்திற்கும் கொடுக்கப்படாத மரியாதையை, கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
Comments