காமராஜர் படி, படி என்றார்; தற்போது குடி, குடி என்கிறார்கள் - அண்ணாமலை

தமிழகம் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பள்ளிக் குழந்தைகளை பேருந்துகளில் ஏற்றிச் சென்று நீட்டுக்கு எதிராக கையெழுத்து போட வைப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். கரூரில் என் மண், என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அவர், காமராஜர் படி, படி, படி என்று கூறியதற்கு மாறாக தற்போது குடி, குடி, குடி என்கிறார்கள் என்றார்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து ஒரு தலைமுறையே அழிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, போலீசார் தன்னுடன் வந்தால் சந்து, பொந்துகளில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கிலோ கணக்கில் கஞ்சாவை பிடித்துத் தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரூர் திருமாநிலையூரில் இருந்து தாந்தோணிமலை வரை நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலையை பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்றனர்.
Comments