தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாத மருத்துவ சிகிச்சை: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பாத மருத்துவம் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அரசின் மருத்துவத்துறைக்கும் கோவை கங்கா மருத்துவமனைக்கும் இடையே பாத மருத்துவம் மற்றும் நீரழிவு நோய் அறுவை சிகிச்சை சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மழைக்காலத்தை முன்னிட்டு நவம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் வரையில் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக் கிழமைக்கு பதில் சனிக்கிழமை தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
Comments