கிருஷ்ணகிரில் மகன் சாவில் சந்தேகம் என கடிதம் எழுதி வைத்து விட்டு 12-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தாய் தற்கொலை

0 3549

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் விபத்தில் உயிரிழந்த மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு தாய்-மகள் தற்கொலை செய்துக் கொண்டனர்.

உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான கிரி, கடந்த ஆகஸ்ட் மாதம் டூவீலரில் சென்று மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த கிரி செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

கிரிக்கும் வேறு நபருக்கும் தகராறு இருந்ததால் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் காமாட்சி புகார் அளித்தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கருதியுள்ளார்.

இதனையடுத்து, 12ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் காவ்யாவுடன் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தனது அண்ணன் வாங்கிக் கொடுத்த சங்கிலியோடு தன்னை புதைத்து விடுமாறு கடிதத்தில் காவ்யா தெரிவித்துள்ளார்.

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிரியின் உறவினர்களிடம் எஸ்.பி, சரோஜ்குமார் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments