ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கப்போவதில்லை : டெலிகிராம் நிறுவனம்

பேஸ்புக்கும், டுவிட்டரும் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கிவரும் நிலையில், அவ்வாறு தாங்கள் செய்யப்போவதில்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெலிகிராம் நிறுவனத்தின் சாட் செயலியை 80 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம், இஸ்ரேலின் ஆஷ்கெலான் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு முன் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு டெலிகிராம் செயலி மூலம் ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்ததை சுட்டிக்காட்டிய அந்நிறுவனத்தின் சி.இ.ஒ. பவேல் டுரோவ், ஹமாஸ் கணக்குகளை முடக்கியிருந்தால் அப்பாவி மக்கள் பலர் இறந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
Comments