படுகொலையான அதிமுக ex அமைச்சர் தேங்காய் உடைத்து பூஜை செய்த திமுக அமைச்சர் மெய்ய நாதன்..!

0 3152

13 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலத்தின் நினைவு நாளில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் 13 வது ஆண்டு நினைவு நாள் குருபூஜையில் பங்கேற்க ஆதரவாளர்கள் சென்ற காட்சிகள் தான் இவை..!

கொலை செய்யப்பட்டவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தின் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர் என்பதால் கட்சி பேதமின்றி அவர் சார்ந்த சமூகத்தினர் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் பேரணியாக சென்று ஒவ்வொரு ஆண்டும் வடகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

திமுக சார்பில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மெய்ய நாதன், மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் படத்தின் முன்பு தேங்காய் உடைத்து, படத்திற்கு தீபாரதனை காண்பித்து பூஜை செய்து வணங்கினார்

பலவேறு அமைப்புகளின் தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் பங்கேற்று வெங்கடாசலத்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இந்த பேரணியால் தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸை , அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments