பிதாமகன், கஜேந்திரா, லூட்டி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை, உடல் நலக்குறைவால் காலமானார்

0 4236

ரஜினி, விஜயகாந்த், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை சென்னையில் காலமானார்.

இன்று மாலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என  அவரது மனைவி லட்சுமி தெரிவித்துள்ளார்.  என்னம்மா கண்ணு, பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் வி.ஏ துரை. கடந்த சில மாதங்களாகவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையிலும் அதன் பின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்திலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகளும், ஸ்ருதி, சிந்து, கீர்த்தனா என்ற மகள்களும் உள்ளனர். 

வி.ஏ.துரை உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவரது மனைவி லட்சுமி கூறும் போது, மருத்துவமனையில் சிகிச்சைகளில் இருந்த பொழுது ரஜினி, சூர்யா, ராகவா லாரன்ஸ், விக்ரம் உள்ளிட்டோர் பலர் உதவி செய்தனர் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments