மயிலாடுதுறையில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

0 1902

ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணிப்பது ஆபத்தானது என எவ்வளவுதான் எச்சரித்தாலும் அதனை பலரும் பின்பற்றாத நிலையில், அவ்வாறு பயணித்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையிலிருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பாபநாசம் செல்வதற்காக பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் அப்பாஸ் என்பவர் சீர்காழிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் மீது ரயில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார்.

பாலத்தை கடந்த பிறகு ரயிலில் அப்பாஸ் இல்லாததால், சீர்காழி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடம் தகவல் அளித்த நிலையில், ஆற்றின் மணல் பரப்பில் படுகாயத்துடன் உயிரிழந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments