கோவை யாரோ எழுதி கொடுத்ததை வைத்து பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை

0 1137

இந்தியாவின் பிரதமராக மோடி வந்த பின்னர்தான் காங்கிரஸ் , திமுக செய்து வந்த 20 சதவீத ஊழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,பாஜகவினருடன், என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார்..

காங்கேயம் கூட்டத்தில் யாரோ எழுதி கொடுத்த துண்டு சீட்டை முதலமைச்சர் வாசித்து விட்டு சென்றதாக குற்றம்சாட்டினார். ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கி விட்டு ஏதோ உலக சாதனை செய்தது போல் பேசுகிறார் என குற்றம்மசாட்டினார்.

34 அமைச்சர்களில் 21 பேர் ஊழல் அமைச்சர்களாக இருப்பது திமுக ஆட்சியில்தான் என்றும் அண்ணாமலை கூறினார்.  முதலில் இருந்த கம்யூனிசம் இப்போது இல்லை என்றாலும், கோவை மற்றும் திருப்பூர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments